ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

🕔 September 5, 2023

ஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் அரச புலனாய்வின் திட்டத்தின் படியே நடந்ததாகவும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் குழுவினரை அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே சந்தித்ததாகவும், சேனல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஆசாத் மௌலான தெரிவித்துள்ளார்.

ஆசாத் மௌலான என்பவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் என்பதும், அந்தக் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்