மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

🕔 September 2, 2023

திவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சில் இன்று (02)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது – தற்போதுள்ள ஏகபோகத்துக்கு மாறாக, சந்தையில் போட்டியை உருவாக்கும் என்றும், இதனால் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

மேலும், ஒரு வருடத்துக்கு உயிர்காக்கும் மற்றும் ஏனைய அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதற்கு அனுமதிக்கும் முறைமையை தயார் செய்யுமாறும், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்