வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

🕔 August 29, 2023

நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக, 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர் சேதங்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏனைய பயிர் சேதங்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்க முடியுமாக இருந்தால், அது தொடர்பிலும் நடவடிக்கையெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமரவீர கூறியுள்ளார்.

தற்போதைய வரட்சி நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் 58,766 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்