காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

🕔 August 22, 2023

காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர் அடையாளம் தெரியாத நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மரணங்களுக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 குறித்த சிறைச்கைதிகள் இருவரும் பக்ரீரியா தொற்று காரணமாகவே மரணமடைந்தனர் என அவர் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  ஏகநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் விளக்கமறியல் சிறைக் கைதிகளாவர்.

காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்