‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம்

🕔 January 25, 2016

Hakeem - Book - 98– ஜெம்சாத் இக்பால் –

‘சிங்க லே’ என்கிற கோசத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளைத் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கவிஞர் எஸ். ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மருதானை வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தற்போது ‘சிங்க லே’ என்பது நாட்டில் பேசப்படும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது. ‘சிங்க லே’ என்கிற விடயத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்றுதான் கூறவேண்டியுள்ளது.

ஏனெனில், யுத்த சூழல் ஒழிந்து, சிறுபான்மை சமூகங்களுக்கு நேர்ந்த அநியாயங்களும் அட்டூழியங்களும் தகர்க்கப்பட்டு, நிம்மதியான கௌரவமான எதிர்காலமொன்று மலர்ந்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்காக, எதிரிகளை தேடித் திரியும் சில கயவர் கூட்டத்தினர்தான், இத்தகைய பேரினவாதக் கோசங்களை உருவாக்கி எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையை சிதைக்க முற்படுகின்றனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்