நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது

🕔 August 15, 2023

நாய் உணவு எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு தொகை ஹசீஸ் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு கனடாவிலிருந்து – நாய் உணவு எனும் பெயரில் அனுப்பப்பட்ட பொதியிலிருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

மஹரகம பகுதியில் இல்லாத முகவரிக்கு இந்த போதைப் பொருள் அனுப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் 670 கிராம் ஹசீஸ் போதைப் பொருள் இருந்ததாகவும், அதனை சுங்க தபால் மதிப்பீட்டுக் கிளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்