தேசிய ஒலிம்பியாட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை மாணவிக்கு பாராட்டு

🕔 August 15, 2023

– கே.அப்துல் ஹமீட் –

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையினை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவி ஜே. இஸ்ஸத் பானு, பாடசாலை சமூகத்தினரால் இன்று (15) பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்ற கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. இஸ்ஸத் பானு, எம்.எம். அஹமட் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

குறித்த பத்து மாணவர்களும் அண்மையில் தேசிய ரீதியில்இடம்பெற்ற ஒலிம்பியாட் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் அட்டாளைச்சேனை அக் /அந்நூர் மகா வித்தியாலய மாணவி இஸ்ஸத் பானு தனது திறமையை வெளிப்படுத்தி – தெரிவுசெய்யப்பட்ட 110 மாணவர்களுள் 38வது இடத்தைப் பெற்றார்.

இதனையடுத்து மேற்படி மாணவி ஜே. இஸ்ஸத் பானுவை பாராட்டும் நிகழ்வு, அதிபர் ஏ.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான பாத்திமா, நாகூர் தம்பி மற்றும் கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜி. சமூர் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். றஹீம், பழைய மாணவர்கள் சங்க செயலாளரும் ஊடகவியலாளருமான றிசாத் ஏ காதர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அதிபருமான எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் உறுப்பினர் கே. கியாஸ் ஆகியோருடன் மாணவியின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சமூக, விஞ்ஞான மற்றும் கணித வினா விடைப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்