விடா முயற்சி: 60 வயதில் பட்டதாரியானார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

🕔 August 12, 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க – இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை (பி.ஏ) பட்டப்படிப்பை முடித்துள்ளதாக, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் இதற்கான இறுதியாண்டுப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

2019ஆம் ஆண்டு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரஞ்சன் ராமநாயக்க – க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதியிருந்தார்.

அதே காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் தோற்றி ‘சி’ (C) சித்தியைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த மார்ச் மாதம் 60 வயது பூர்த்தியானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்