சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு

🕔 August 10, 2023

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏகநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், அமைச்சரின் அனுசரணையுடன் பல பில்லியன் ரூபா திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்குள்ள பழைய உலோகத்தை கேள்விப் பத்திர முறையில் விற்பனை செய்வதற்கான அமைச்சரவைத் அண்மையில் எடுக்கப்பட்டதாக காமினி ஏகநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, தொழிற்சாலை வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த பெரும்பாலான ராணுவத்தினரை ராஜாங்க அமைச்சர் முதலில் அப்புறப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தொழிற்சாலைக்கு பதுளையில் இருந்து ஏழு பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டமைக்கும் ராணுவம் அப்புறப்படுத்தப்படடு இரண்டு மாதங்களில் 22 மில்லியன் பெறுமதியான பழைய இரும்புகள் திடீரென திரும்பப் காணாமல் போனமைக்கும் தெளிவான தொடர்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவலையடுத்து, கோபமடைந்த ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், இந்தக் கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினரையும், முன்னாள் தலைவரையும் திட்டியுள்ளார்.

அவரது உரையை எதிர்கட்சி எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்ததுடன், நாடாளுமன்ற விவாதத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மக்கள் பிரதிநிதிகள் சார்பில் அவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்