இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

🕔 August 9, 2023

வுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. .

இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தனுஷ்க, கடந்த வருடம் நொவம்பர் மாதம் கடுமையான நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தினமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும், இரவு 9 மணி தொடக்கம் காலை 6 மணி வரை வெளியே செல்லக் கூடாது, புகாரளித்தவரைத் தொடர்பு கொள்ளக் கூடாது, டிண்டர் மற்றும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, அவர் அவுஸ்ரேலியாவுக்குள் பயணிப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: கடும் நிபந்தனைகளுடன் தனுஷ்கவுக்கு பிணை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்