ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 August 9, 2023

– பாறுக் ஷிஹான் –

பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக  ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி –  பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (8) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (7) சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு இவ்வாறு வாட்ஸ்அப் ஊடாக படம் அனுப்பப்படடுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தையல் இயந்திரம் உட்பட  பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர், தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து  வாட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக அனுப்பி – பாலியல் தொந்தரவு செய்தார் என, அவருக்கு எதிராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  கிடைக்கப்பெற்றது.

இதற்கமைய சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்