தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

🕔 August 8, 2023

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, அவர் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட பாடியதாக குற்றும் சாட்டப்படுகிறது.

நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது தேசிய கீதத்தை இசைக்கும்போது “மஹதா” எனும் வார்த்தையை தான் உச்சரிக்கவில்லை என உமாரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சின் இசைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்