இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்?
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது – பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் (Coronary Artery Disease) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.
80 கிராம் தக்காளியில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் 5% உள்ளது.
தக்காளியில் லைகோபீன் (lycopene) என்ற சேர்மம் உள்ளது. இது ஆன்டி-ஒக்சிடன்ட் (Antioxidant) ஆகவும், வீக்கங்களைத் தடுப்பதோடு, பல ஆய்வுகளின்படி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
தக்காளி அரைத்து உணவில் சேர்க்கப்பட்டால், லைகோபீன், உடலில் நன்றாக உறிஞ்சப்படும் என்று கேட்டலோனியாவில் இருக்கும் ஓபன் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்துப் பேராசிரியரான சிவா பிளாஞ்ச் கூறுகிறார்.
மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே, தக்காளியும் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும்போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கிறது என்பது உண்மைதான், ஆனால், இதற்கு மாறாகப் பல்வேறு ஆய்வுகள், லைகோபீனின் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை வெப்பத்துடன் அதிகரிக்கிறது.
அதேபோல், ஒலிவ் எண்ணெயுடன் சமைத்த தக்காளியை உட்கொள்வதும் அதிலிருக்கும் சேர்மங்களை உடல் நன்கு உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
பிபிசியின் குட் ஃபுட் பத்திரிக்கையின் படி, தக்காளியின் கரோட்டினாய்டுகளின் (carotenoid) பெரும்பகுதி அதன் தோலில் உள்ளது. எனவே தக்காளியில் தோலை உரிக்காமல் உட்கொள்வது நல்லது.