சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

🕔 August 1, 2023

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தற்போது 29,000 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும்.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 30 சிறைச்சாலைகளில் 19,000 சந்தேக நபர்களும் 10,000 கைதிகளும் உள்ளனர்.

Comments