அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

🕔 August 1, 2023

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 05ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். ஹனீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், சிறப்பு அதிதியாக கொழும்பு ஸம் ஸம் பௌன்டேசன் தலைவர் அஷ்சேய்க் எம்.எச். முஹம்மட் யூசுப் முஃப்தி கலந்து கொள்ளவுள்ளார்.

விழாவின் பெண்கள் அரங்குக்கு வைத்திய நிபுணர் ஆபிதா கையூம் தலைமை தாங்குகின்றார்.

மேற்படி விழாவில் 38 ஆலிமாகளும், 30 ஹாபிழாகளும் (புனித குர்ஆனை மனனம் செய்தோர்) பட்டங்களை பெறவுள்ளனர்.

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியுடன் இணைந்ததாக 2018ஆம் ஆண்டு – பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்