பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

🕔 August 1, 2023

ட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று, எதிர்திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பயணிகள் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பலத்த காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என – வட்டவளை பிரதேச வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.

விபத்து நடந்த போது, பேருந்தில் குறைந்தது 100 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்