துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

🕔 July 30, 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கொழும்பு 12 இல் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்