கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 30, 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைத் தவிர, மேலும் 6 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்