
முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர்.
தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளியொருவரை – மேற்படி இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த நோயாளி 48 வயதுடையவராவார்.
மேலதிக விசாரணைகளை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்



