ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 July 26, 2023

ப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய சமுதாயம் நாடு முழுவதும் முதுமை அடைந்து வருவதாகவும், குறைந்து வரும் மக்கள்தொகையை ஈடுசெய்வதில் வெளிநாட்டுப் பிரஜைகள் எப்போதும் பெரிய பங்கை வகிப்பதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

முதல் முறையாக, அங்குள்ள அனைத்து 47 மாகாணங்களிலும் ஜப்பானிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தரவில் தெரியவந்துள்ளது.

ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2.99 மில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 10.7% அதிகரித்துள்ளது.

ஜனவரி 1, 2020 நிலவரப்படி, கொவிட் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவுவதற்கு சற்று முன்பு, ஜப்பானில் 2.87 மில்லியன் வெளிநாட்டினர் வசித்து வந்தனர்.

ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 125.42 மில்லியனாக உள்ளது. இது சுமார் 511,000 மக்கள் தொகையால் குறைந்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது.

குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக 2008 இல் சனத்தொகை வீழ்ச்சி உச்சத்தை எட்டியதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து, கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவை எட்டியது.

டோக்கியோவில் 581,112 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்றும், தலைநகர மக்கள் தொகையில் இது 4.2% க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments