ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

🕔 July 26, 2023

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மூன்று வருட காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிரேஷ்ட பேராசிரியர் மானகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வந்தார்.

அவர் விலங்கியல் பேராசிரியராகவும், ஆராய்ச்சி பேரவையின் இணைத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தில் நீர் தரம் மற்றும் பாசி ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

1992இல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தனது பி.எஸ்.சி (சிறப்பு) பட்டத்தையும், 1998இல் உயிர் பாதுகாப்பு அறிவியல் துறையிலிருந்து எம்.எஸ்.சி பட்டத்தையும், 2001இல் ஜப்பானின் எஹிம் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுயியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.

பேராசிரியர் பத்மலால், இங்கிலாந்தின் ரோபர்ட் கார்டன் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கௌரவ சக விஞ்ஞானி ஆவார்,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்