ட்விட்டருக்கு புதிய லோகோ: ‘லேரி’ பறந்தது

ட்விட்டர் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. அந்த நிறுவனத்தை அண்மையில் எலோன் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘லேரி’ என அறியப்படுகின்ற நீலப் பறவை லோகோவை – ட்விட்டர் நிறுவனம் 2006ஆம் ஆண்டிலிருந்து வைத்திருந்தது.
ஆனால், தற்போது அதற்குப் பதிலாக ட்விட்டர் தனது லோகோவை X என மாற்றியுள்ளது.
இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரின் பறவை லோகோவுக்கு பதிலாக மீம்ஸ்களில் பயன்படுத்தும் பிரபலமான ‘Doge’ (நாய்) முகத்தை லோகோவாக எலோன் மஸ்க் மாற்றியிருந்தார். ஆனாலு மிகக் குறுகிய காலத்துக்குள் அதனைக் கைவிட்டு, மீண்டும் பழைய லோகோ நீலப் பறவையை அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.