சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

🕔 January 24, 2016

Kidney - 0877ட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

சட்டவிரோத சிறுநீரக மாற்றம், தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டொக்டர் பாலித மஹிபால, சட்டவிரோத சத்திரசிகிச்சை இடம்பெற்றதாகக் கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் வேண்டியுள்ளார்.

தலைநகரிலுள்ள நான்கு தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறான சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், சம்பவத்துடன் ஆறு வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்து, இந்தியாவின் தெலுங்கானா பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்