டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

🕔 July 9, 2023

பரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொலிஸ் சைபர் குற்றப் பிரிவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டியுள்ளமை குறித்த ஒலிப்பதிவில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நபர் தனக்குத் தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் அழைப்புகளை மேற்கொண்டு வந்ததாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு குறுஞ்செய்திகளையும் அந்த நபர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சரை அவ்வாறு இடையூறு செய்ய வேண்டாாம் என அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் – குறித்த நபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், அழைப்பெடுத்தவர் – பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் குறித்த நபரை திட்டியதாகக கூறப்படும் ஒலிப்பதிவினை, சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு – பொலிஸ் இணையக் குற்றப்பிரிவு தலைவரிடம் ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்