தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை

🕔 July 9, 2023

தய நோயாளியான தந்தைக்கு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தனது வீட்டிற்கு வந்து மேற்படி பதிவு தொடர்பில் விசாரித்ததாகவும், அந்தப் பதிவை நீக்குமாறு பொலிஸ் அதிகாரியொருவர் வற்புறுத்தியதாகவும், இது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னிடம் கூறியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகொட வைத்தியசாலையில் தனது தந்தைக்கு ‘ஆஞ்சியொகிராம்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் தமக்கு வைத்தியசாலையினால் – தகவல்கள் எவையுமற்ற வெற்று ‘சிடி’ (இறுவட்டு) வழங்கப்பட்டதாகவும், அதுவே தன்னை ‘பேஸ்புக்’கில் பதிவிட தூண்டியதாகவும் குறித்தபெண் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்