புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

🕔 July 7, 2023

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்குக் கிடைத்ததாகவும், தற்போதைய தொகை அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜூன் 23, 2023 வரையில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள மொத்த பணம் 2823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (87816 கோடி ரூபா) என, அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த ஆண்டை விட அதிகரிப்பைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் நாங்கள் இன்னும் 2021இன் நிலைகளுக்கு சற்று குறைவாகவே இருக்கிறோம். கடின உழைப்பாளிகளான நமது உலகளாவிய புலம் பெயர் சமூகம் பணம் அனுப்புவதை தொடர்ந்து உற்சாகமூட்டுமோம்’என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து மே மாதத்தில் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர் எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 2023 இல், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 2022 ஏப்ரலில் பதிவாகிய 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்