லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது

🕔 July 7, 2023

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று (07) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 90 ரூபாவால் குறைந்துள்ளது.இதன்படி, அதன் புதிய விலை, 3 ஆயிரத்து 690 ரூபாயாகும்.

05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 476 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லா.ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 04ஆம் திகதி எரிவாயுவின் விலையினைக் குறைத்த லிட்ரோ நிறுவனம், 12.5 கிலோகிராம் எரிவாயுவை 2,982 ரூபாய்க்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்