ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம்

🕔 July 5, 2023

ஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்றைய நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் விபத்தில் சிக்சி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்