அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை

🕔 July 5, 2023

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன.

குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று (05) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 06) முற்பகல் 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்