‘மொபைல் ஃபோன்’களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி: இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தரும் அறிவுரைகளை கவனியுங்கள்

🕔 July 4, 2023

மொபைல் ஃபோன்களின் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘டெம்பர்ட் கிளாஸ்’ (tempered glass) கவர்கள், அதிக வெப்பத்தை உள்ளே தேக்கி வைப்பதாக, இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு பொறியியல் பேராசிரியரான ராஸ் வ்யாட் மில்லிங்க்டன் கூறுகின்றார்.

மொபைல் ஃபோன்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அவர் தரும் அறிவுரைகளைக் கவனியுங்கள்.

  • அதிகமாக சார்ஜ் போடாதீர்கள்: சூடாக இருக்கும் ஃபோனை சார்ஜ் செய்தால், அது மேலும் வெப்பத்தை உண்டக்கும்.
  • வெயில் படும் இடத்தில் வைக்காதீர்கள்: நேரடியாக வெய்யில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள். குறிப்பாகக் கார்களில் அவற்றை வைத்துவிட்டுச் செல்லாதீர்கள். முடிந்த அளவுக்கு அவற்றை நிழலில் வையுங்கள். முடிந்தால் ஒரு ஃபேனுக்குக் கீழே வையுங்கள்.
  • ஃபோனை இலகுவாக வையுங்கள்: உள்ளேயும் வெளியேயும். அதை கவரிலிருந்து வெளியே எடுத்து வையுங்கள்.
  • தேவையற்ற செயலிகளை நிறுத்திவிடுங்கள்: உதாரணமாக நீங்கள் ஜி.பி.எஸ் பயன்படுத்தவில்லையெனில், வேறேதாவது செயலியைப் பயன்படுத்தவில்லையெனில், அவற்றை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், குறைவான செயலிகளைப் பயன்படுத்தினால், குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீர்கள். அதனால் உங்கள் மொபைல் ஃபோன் குறைவான வெப்பத்தை உண்டாக்கும்.
  • Low Power Mode-ஐ உபயோகியுங்கள்: எவ்வளவு குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீர்களோ, உங்கள் மொபைல் அவ்வளவு நலமாக இருக்கும். உங்கள் மொபைல் சூடாகித் திணறிக்கொண்டிருக்கிறதென்றால், அதனை சில நிமிடங்கள் ஆஃப் செய்துவிட்டு, அதன் வெப்பம் குறைந்ததும் ஆன் செய்யுங்கள்.
  • ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்: உங்கள் ஃபோனை ஃப்ரிட்ஜிலோ, ஐஸ் கட்டிகளிலோ வைக்காதீர்கள். அது கண்டிப்பாக உதவாது. சட்டென மாறும் வெப்பநிலைகள் ஃபோன்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஐஸ் கட்டியில் இருந்து வரும் நீர், ஃபோனில் தேங்கும் அபாயமும் உள்ளது. ஃபோன்களுக்குள் அதிக வெப்பத்தைத் தடுக்கும் வழிமுறை உள்ளது. இது – அவை சேதமடைவதைத் தடுக்கும் என்கிறார் ராஸ் வ்யாட் மில்லிங்க்டன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்