லிட்ரோ எரிவாயு விலை சடுதியாக குறைந்தது

🕔 July 4, 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இன்று ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

5  கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு 83 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ஆயிரத்து 198 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 37 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 561 ரூபாய் என்ற புதிய விலைக்கு அதனை விற்பனை செய்யவுள்ளது.

Comments