நாட்டின் வருமானம் முதல் காலாண்டில் 1,154 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

🕔 July 1, 2023

ரச வருமானமாக 1,154 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2022 இல் அரச வருமானம் ரூ.1,751 பில்லியனாக இருந்தது.

உள்நாட்டு உற்பத்தியில் இது 7.3 சதவீதமாகும். இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15.8 சதவீதமாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரசு – மறைமுக வரிகளாக 850 பில்லியன் ரூபாயினையும் நேரடி வரியாக 304 பில்லியன் ரூபாயினையும் பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டில் மொத்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 333,313 ஆக இருந்தது. இவற்றில் 291,677 வருமான வரிக் கோப்புகளாகவும், மீதமுள்ள 41,636 பணம் செலுத்திய வரிக் கோப்புகளாகவும் இருந்தன.

எதிர்காலத்தில் நாட்டின் வரித் தளத்தை விரிவுபடுத்தும் வகையில் – பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்