உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி

🕔 June 28, 2023

ள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான யோசனை இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த யோசனை நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசேட கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Comments