கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

🕔 June 28, 2023

பர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர், மேலும் இருவருடன் காரில் பயணித்தார்.

சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்