ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல்

🕔 June 19, 2023

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவின் வீடு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோனாவல – பமுனுவில சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீதெ இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலின் போது வீட்டில் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்