அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்துக்கு 11 லட்சம் பெறுமதியான தளபாடங்கள் அன்பளிப்பு

🕔 June 16, 2023

– ஏ.எல். நிப்றாஸ் –

க்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை தளபாடங்கள், பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான ரி.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் -பாடசாலை அதிபர் ஏல்.எல். அப்துல் ஜெலீல் தலைமையிலானவர்களிடம் இத்தளபாடங்களை புதன் கிழமை (14) கையளித்தார்.

தரம் 10 மற்றும் 11 இற்கு – மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இப்பாடசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை தொடர்பில் பழைய மாணவர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதனடிப்படையில், தங்போது இங்குள்;ள ஆசிரியர்களுக்கு மேலதிகமாக – அவசியமான சில பாடங்களை போதிப்பதற்காக வெளியில் உள்ள தகுதிவாய்ந்த வளவாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலையில் நீண்டகாலமாக நிலவி வரும் தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டு 80 மாணவர் மேசைகள், கதிரைகள், ஆசிரியர் மேசைகள், மற்றும் வெண்பலகைகள் ஆகியவை தற்போது அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இரு வகுப்பறைகள் புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. ஜெலீல்; தரம் 10, 11 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கும், வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் – பழைய மாணவர் சங்கத்துக்கும் அபிவிருத்தி சங்கத்துக்கும் பழைய மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ரி.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் மற்றும் உறுப்பினர் வைத்தியர் எம்.எம். தமீம் ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்