இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

🕔 June 16, 2023

ரண்டு அரச திணைக்களங்கள் கலைக்கப்படுவதை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இதற்கான அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (13) வெளியிட்டது.

உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் திணைக்களம் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (1979ஆம் ஆண்டின் முதலாம் இலக்கம்) விதிகளின் கீழ், உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் நிறுவப்பட்டது. இது நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.

தொலைத்தொடர்புத் திணைக்களம், 1957 ஆம் ஆண்டின் அரச கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு,1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ஒருங்கிணைப்பு ஆணையின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்