நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

🕔 June 15, 2023

லங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 26 ஆயிரத்து 791 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் அமர்வு ஒன்றின் போது – நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய, இந்த நிகழ்வின் போது வெளியிட்ட தகவலில், 17 ஆயிரத்து 502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 9 ஆயிரத்து 289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1309 கைதிகள் நீதிமன்றங்கள் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்