சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

🕔 June 8, 2023

ப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.

குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது.

குறித்த மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்த போதும், அவர்கள் அதன்படி செயற்படாமை காரணமாவே, அவர்கள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்