கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

🕔 June 7, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையினையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மருதங்கேணி பகுதியில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் சில நாட்களுக்கு முன்னர் வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பில் இன்று நாடாளுமன்றல் கடுமையான விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்