ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

🕔 June 7, 2023

லங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் கூறினார்.

கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று (06) நாடாளுமன்றத்தில் அமைச்சரின் தலைமையில் கூடிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக – கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஏற்கனவே திட்ட அறிக்கைகளை வழங்காத கைத்தொழில்துறையினருக்கு வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் வசதிகளை வழங்குவதற்கு தேவையான பணிப்புரைகளை அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்