லிற்றோ எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டது: விலைகளும் அறிவிப்பு

🕔 June 4, 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு இன்று (04) நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 281 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 83 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 598 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்