தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார்

🕔 May 26, 2023

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க, அவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தனது மொத்த சொத்து மதிப்பு 400 கோடி ரூபா என அவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிச்சயமாக தானே – இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி எனவும், பிரபஞ்ச சக்தியினால் தனக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், இந்த விடயத்தை சிலர் நகைச்சுவையாக பர்த்தாலும் அதுவே நிதர்சனம் என்றார்.

“ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஜனாதிபதிகள் எவரையும் நான் சேர் என அழைத்தது கிடையாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிர் தலைராகப் பதவி வகித்த ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்றின் மூலம், அந்த ஆணைக்குழுவிலிருந்து விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்