தலைப்புச் செய்திகள்

தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

தன்னை பதவி நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தினைப் பார்வையிட தனக்கும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயக்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – கடந்த 09ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான இந்தப் பிரேரணை தாம் ஆதரிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி – இந்தப் பிரேரணையை எதிர்க்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு