காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 May 19, 2023

62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது.

மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் – கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றுக்கு, தன்னைச் சந்திக்க மகளுடன் வருமாறு – தனது காதலிக்கு பிக்கு கூறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிக்குவின் காதலி உரிய இடத்துக்கு வந்தவுடன் – அதிக போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு பிக்கு தனது வயது குறைந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை மறைக்குமாறு சிறுமியை அவரின் தாய் அச்சுறுத்திய போதிலும், அவர் தனது தந்தை மற்றும் பாட்டியிடம் இதுபற்றிக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிக்கு – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்