மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள்

🕔 May 17, 2023

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

முதல் தடவை

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழர்கள் இருவர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஏற்கனவே பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் பதவி வகித்த மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி அதிரடியாகப் பதவி நீக்கம் செய்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

அவர்களை பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்திருந்தபோதும், அதற்கு அவர்கள் உடன்படாத நிலையிலேயே, அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்பான செய்தி: மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்