போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பது குறித்து, நீதிமன்ற ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நபரை – மஹியங்கனை பொலிஸார் நேற்று (12) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.