பால்மா விலை குறைகிறது

🕔 May 12, 2023

றக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதமும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டது. அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவினாலும், 01 கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்