தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது
இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, ஒரே வலையமைப்புக்கான அழைப்புக்கட்டணம் 50 சதவீ தத்தால் அதிகரிக்கப்பட்டு, நிமிடமொன்றுக்கு ரூபா 1.00 இலிருந்து ரூபா 1.50 ஆக மாற்றமடையவுள்ளது.
ஏனைய வலையமைப்பிற்கான கட்டணங்கள் 28 சதவீதத்தினால் குறைக்கப்பட்டு, ரூபா 2.00 இலிருந்து ரூபா 1.80 ஆகவும்) மாற்றமடைகிறது.
இதேவேளை, SMS கட்டணம் 20 சதமாக மாற்றமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி வலையமைப்பினர் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட வலையமைப்பினர் இதன் மூலம் ஏனைய வலையமைப்பினருடன் போட்டியிட முடியும் என இந்திரஜித் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 05 பிரதான தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.