முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை

🕔 May 11, 2023

டுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்கள் – குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரகலய மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில், கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டார.

இதன் பின்னர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டுக்கு அமைய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பியத் நிகேஷலவும் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பித்தக்கது.

இந்த நிலையிலேயே இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்